Saturday 5 March 2016

முகப்பரு - Acne vulgaris



mugapparu8
முகப்பரு ( acne vulgaris ) :

பொதுவாக பதின் வயதில்(Teenage) கிட்டத்தட்ட எல்லோருக்கும் வரக்கூடிய ஒரு பிரச்சனை முகப்பரு. அதிலும் பதின் வயதின் கடைசி வருடங்களில் இந்தப் பிரச்சனை அதிகமாகவே இருக்கும். அதிலும் ஆண் பிள்ளைகளுக்கு பெண் பிள்ளைகளை விட அதிகமாகக் காணப்படும். ஆனால் சில பெண் பிள்ளைகளுக்கு இதன் தீவிரம் மிக அதிகமாக இருக்கும். சிலருக்கு இலேசாக ஆரம்பித்து சரியாகிவிடும். ஆனால் சிலருக்கு இது தொடர் பிரச்சனையாக இருக்கும்.
mugapparu1சில பெண்களுக்கு 30 வயதுக்கு மேலும் கூட இது ஒரு பிரச்சனையாக தொடர்வதுண்டு.
காட்சி ஊடகங்களில் (தொலைக்காட்சி, சினிமா) பணியாற்றும் பெண்களுக்கு முகப்பரு பெரிய தொல்லையாக இருந்து மன உளைச்சலைத் தரும்.
சிலருக்கு இதனால் முகத்தில் தழும்புகள் ஏற்பட்டு அவை மாறாமல் நிலையாக இருந்துவிடுவதும் உண்டு.
mugapparu4

முகப்பரு எங்கெல்லாம் வரலாம்?
இதென்ன கேள்வி என நீங்கள் நினைக்கலாம். ஆனால் பொதுவாக முகத்தில் வந்தாலும், தோள்பட்டை, மார்பின் மேல் பகுதி, முதுகு போன்ற இடங்களிலும் இது வருவதுண்டு. சிலருக்கு முதுகில் பிட்டம் (Buttocks) வரைகூட வருவதுண்டு.

முகப்பரு ஏன் வருகிறது?
mugapparu5முகப்பரு ஏன் வருகிறது என்று தெரிந்து கொள்வதற்கு முன் தோலின் ஒன்றிரண்டு பகுதிகளை தெரிந்து கொள்வோம். தோல் என்பது உடலின் மிகப் பெரிய ஒரு உறுப்பு. மேலும் தோல் என்பது ஒரு சிக்கலான உறுப்பு. இது பல அடுக்குகளால் ஆனது மற்றும் பல சிறு சிறு உள் பகுதிகளை உடையது.
  • மயிர்க்கோளம் – Hair Follicle
இது தோலின் ஒரு பகுதி. மயிர் உற்பத்தியாகும் பகுதி.
  • சீபம் சுரப்பி – Sebaceous Gland
தோலுக்கும், மயிருக்கும் எண்ணெய் பசையை கொடுக்கும் ஒரு சுரப்பி. இது சுரக்கும் சுரப்பின் பெயர் ‘சீபம்’.
சரி, இனி முகப்பரு ஏன் ஏற்படுகிறது என பார்ப்போம்.

-               ‘சீபம்’ சுரப்பு காரணமா?

சீபம் சுரப்பி அதிகமாக சுரப்பதால் முகப்பரு வரலாம் எனவும் கூறப்படுகிறது. (Increased Sebum Secreting rate) அப்படியானால் ஏன் அதிகமாக சுரக்கிறது?

-               ஹார்மோன்கள் காரணமா?

குறிப்பாக ஆண்களுக்கான Androgenஹார்மோன் காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. பதின் வயதில் இந்த ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிப்பதால் இந்தப் பிரச்சனை துவங்குவதாகவும் கருதப்படுகிறது. அதே சமயம் பெண்களுக்கான ஹார்மோன்களும் இதற்குக் காரணமாக இருக்கின்றன.
ஆனால் பலருக்கு சோதனை செய்து பார்த்ததில் ஹார்மோன்களின் அளவு சரியான அளவிலேயே இருந்திருக்கிறது. எனவே இதுவே காரணம் என இறுதியாகக் கூற முடியவில்லை.

மயிர் கோளத்தில் ஏற்படும் வீக்கம் காரணமா?

பல்வேறு காரணங்களால் மயிர்க்கோளத்தில் ஏற்படும் வீக்கம் முகப்பருவிற்குக் காரணம் எனவும் கூறப்படுகிறது. மயிர் துவாரங்கள் அடைபடும்போது முகப்பரு ஏற்படுகிறது.
பதின் வயதில் மயிர்க் கோளங்கள் முதிர்ச்சி அடைவதால் முகப்பரு தோன்றுகிறது(Hair follicle Maturation).

பரம்பரை காரணமா?

பரம்பரையும் ஒரு காரணமாகக் கூறப்பட்டாலும் இதுவும் தீர்க்கமான முடிவல்ல.

மரபணு காரணமா?

முகப்பருவிற்கு மரபணு காரணமா என்ற ஆய்வகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை.

கிருமிகள் காரணமா?

Propionibacterium acnes போன்ற தொற்றுகளின் காரணமாகவும் ‘சீபம்’ வெளியேறும் துவாரங்களில் (Pilosebaceous duct) வீக்கம் ஏற்பட்டு முகப்பரு பிரச்சினை அதிகமாகிறது.

வேலை மற்றும் வாழ்க்கை முறை காரணமா?
எண்ணெய் பிசுக்கு முகத்தில் இருக்கும் படியான வேலை செய்வது மற்றும் அது மாதிரியான வாழ்க்கைச் சூழ்நிலையில் இருப்பதால் முகப்பரு வரலாம்.
மேலும் முகத்தில் வெயில் படாமலே இருப்பதும் முகப்பரு வருவதற்கு ஒரு காரணமாக இருக்க முடியும்.

மருந்துகள் காரணமா?
mugapparu8
-               Certicosteroids – ஸ்டீராய்டுகள்
-               AcTH
-               Testosterone (ஹார்மோன் மருந்துகள்)
-               Gonadotropins
-               Contraceptives (கருத்தடை மாத்திரைகள்)
-               Trimethadione (வலிப்பு மருந்து)
-               Iodides
-               Bromides
போன்ற மருந்துகளை உட்கொள்வதால் பக்க விளைவாக முகப்பரு வரலாம்.

White head, Black head என்றால் என்ன?
mugapparu2
முகத்தில் வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் சிறு சிறு முள் போன்று தோன்றி இருக்கும். இதனை White head, Black head என்கிறோம்.
இவை சீபம் மற்றும் தோலின் Keratinஇரண்டும் கலந்து சீபம் வெளியேறும் துவாரங்களை அடைத்துக் கொள்வதால் உண்டாகின்றன. தோலின் நிறமிகளை Melanin ஆக்சிஜனேற்றம் அடைவதால் இவற்றில் சில கருப்பு நிறத்திலும் மற்றவை வெள்ளை நிறத்திலும் உள்ளன.
சரி இப்படி பல்வேறு காரணங்கள் முகப்பருவிற்கு கூறப்பட்டாலும் இன்னும் முகப்பருவிற்கான சரியான காரணம் முடிவாகக் கூறப்படவில்லை.
The Pathogenesis of Acne is incompletely understood என்கிறது நவீன மருத்துவம்.

சரிஇனி சித்த மருத்துவ விளக்கத்திற்கு வருவோம்
தோல்:
mugapparu5
உடலில் இயங்கும் மூன்று இயக்கங்களான வாதம், பித்தம், கபம் என்பதில் தோல் என்பது வாதம் செயல்படும் உறுப்பு. தோல் மற்றும் நரம்புகள் வாதம் இயங்கும் உறுப்புகளாக உள்ளன.
கரு உற்பத்தி ஆகும் போது மூன்று அடுக்குகளாக உற்பத்தியாகிறது. Endoderm, Mesoderm, Ectoderm
இதில் தோல் மற்றும் நரம்பு மண்டலம் ஆகியவை Ectoderm எனும் ஒரே அடுக்கிலிருந்து உருவாகின்றன.
எனவே நரம்பு மண்டலத்தின் செயல்பாடு தோல் முழுவதும் பிரதிபலிக்கும். எல்லா தோல் நோய்களோடும் மனதுக்கு மிகுந்த தொடர்பு உண்டு. எல்லா தோல் நோய்களிலும் மன பிரச்சனைகள் ஒரு காரணியாக இருக்கும்.
ஆக வாதத்தின் செயல்பாட்டில் ஏற்படும் சீர்கேடே தோல்நோய்களுக்குக் காரணம்.
முகப்பருவிற்கு காரணமும் அதுவே. எனவே முகப்பருவின் மர்மம் வாதத்தின் செயல்பாட்டில்தான் உள்ளது.

முகப்பரு சிகிச்சை:

வாதத்தை சமன் செய்வதற்காக முதலில் பேதிக்கு மருந்து கொடுத்து சிகிச்சையை துவங்க வேண்டும்.
பேதி செய்வித்தல் (Purgation) என்பது அனைவரும் நான்கு மாதத்திற்கு ஒருமுறை எடுத்துக் கொள்வது அவசியம். இது உடலின் எல்லா விதமான சுரப்பிகளின் செயல்பாட்டையும் சரிசெய்யும்.

மலச்சிக்கல்:

மலச்சிக்கல் இல்லாமல் உடலை வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
மலச்சிக்கலுக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால் பெரும்பாலும் உணவு மற்றும் பழக்க வழங்கங்களே காரணமாக அமைகிறது.
மலச்சிக்கலை சரிசெய்வதற்கு அநேக நல்ல சித்த மருந்துகள் உள்ளன என்றாலும் அவற்றை சித்த மருத்துவரின் ஆலோசனையடன் சாப்பிடுவதே நல்லது.
-அகத்திக்கீரை(அடிக்கடி சாப்பிடக்கூடாது)
-அத்தி
- பச்சைக் காய்கறிகள்
- நெல்லிக்காய்
- கீரைகள் (மதியம் அவசியம்)
- பழங்கள்
- அன்னாசிப்பழம்
- பேரீச்சை
- சுரைக்காய்
- சோம்பு
- பீர்க்கங்காய்
- மக்காச்சோளம்
போன்றவை அதிகம் சாப்பிடுவது மலச்சிக்கலைத் தடுக்கும்.
நிறைய நீர் அருந்த வேண்டும். நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்கள் நிறைய எடுத்துக் கொள்ள வேண்டும்.


உள் மருந்து:
நோயின் தன்மை, நோயாளியின் தேக நிலை ஆகியவற்றை கணித்து முறையான சித்த உள் மருந்துகள் எடுத்துக் கொண்டால் முகப்பருவை சரிசெய்யலாம்.

வெளிப்பூச்சு:
அநேக பூச்சுகளை (Creams) போடுவது கூட முகப்பருவை அதிகரிக்கும்.
எண்ணெய்த் தன்மையை போக்கக்கூடியவதும் தோலில் ஏற்படும் தொற்றுக்களை தடுக்கக் கூடியதுமான சித்த மருத்துவ மருந்துகள் உள்ளன.
அவற்றை காலையிலும் மாலையிலும் முகத்தில் பூசி, சிறிது நேரம் வைத்திருந்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி வருவதால் முகப்பரு மறையும்.

முகத்தில் வெயில்:
முகத்தில் வெயில் படாமலே இருக்கக்கூடாது. சிறிது நேரமாவது முகத்தில் வெயில் படுவது அவசியம். அதே போல முகத்தில் வியப்பதும் அவசியம்.

உடற்பயிற்சி:
சோம்பலான மற்றும் உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை இருந்தால் உடற்பயிற்சிக்கு சிறிது நேரம் ஒதுக்குவது அவசியம்.

மருத்துவ ஆலோசனைக்கு:
Dr.Jerome -FI
Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.
அலைபேசி எண்: 9444317293
இணையதள முகவரி:www.doctorjerome.com
மின்னஞ்சல் முகவரி :drjeromexavier@gmail.com
முகநூல் முகவரி: https://www.facebook.com/jerome.xavier.5209?fref=ts

No comments:

Post a Comment