Wednesday 27 January 2016

சித்த மருத்துவம் ஒன்றும் முற்றிய நோய்களுக்கான மருத்துவமல்ல



mutriya noikkaana maruthhuvam4

எந்த நோயானாலும் சரி, அதற்கு ஆரம்ப நிலையிலேயே சித்தமருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டால் சுலபமாக சரிசெய்துவிட முடியும். அதுமட்டுமல்ல, அந்நோய் மீண்டும் வராமலே தடுத்துவிடவும் முடியும்.
ஆனால், என் அனுபவத்தில் நோயாளிகளிடம் நான் பார்க்கும் ஒரு பெரிய தவறு என்னவென்றால், முதலில் ஏதேனும் ஒரு மருத்துவ முறையைப் பார்க்க வேண்டியது, (ஒருவேளை அந்த மருத்துவ முறையில் அந்த நோயை குணமாக்கக்கூடிய மருந்துகள் எதுவும் இல்லாமல் இருக்கலாம். மாறாக வெறும் நிவாரணம் மட்டும் இருக்கலாம்) இப்படியே பல ஆண்டுகள் தொடர்ந்து அந்த மருத்துவ முறையிலேயே சிகிச்சை எடுப்பர். இதற்குள் நோய் முற்றிவிடும். பிறகு மாற்று மருத்துவம் ஏதாவது செய்து பார்க்கலாமே என்று முடிவெடுத்து சித்த மருத்துவரிடம் வருவர்.
எந்த மருத்துவ முறையாக இருந்தாலும் சரி, நோய் மிகவும் முற்றிய நிலையில் குணமாக்குவது கடினம்.
ஒரு சில நோய்களுக்கு சித்த மருத்துவம் எடுத்துக் கொள்வதே சிறந்தது.
“என்னென்ன நோய்களுக்கு சித்த மருத்துவம் எடுத்துக் கொள்வதே நல்லது” என்ற கட்டுரையில் (இந்த கட்டுரை (http://siragu.com/?p=18084) இந்த இணையதளத்திலேயே உள்ளது) இந்த நோய்களுக்கு சித்த மருத்துவமே சிறந்தது.
ஒரு உதாரணத்திற்கு வெண்புள்ளி நோயை வைத்து விளக்குகிறேன்.
வெண்புள்ளி நோயை சித்த மருத்துவத்தில் எளிதாக குணப்படுத்தி விடமுடியும். ஆனால்,

mutriya noikkaana maruthhuvam5
•    நோய் ஆரம்பிக்கும் போதே உதடு, ஆண்குறி போன்ற இடங்களில் தோன்றினால் குணமாவது கடினம்.

mutriya noikkaana maruthhuvam6

•  வெண்படை உள்ள இடத்தில் உள்ள தோல் மட்டுமல்லாமல், அந்த இடங்களில் உள்ள முடிகளும் (Hair) சேர்ந்து வெண்நிறம் அடைந்தால் நோய் குணமாவது கடினம்.
இப்படி ஒவ்வொரு நோயையும் ஒருசில குறிகுணங்களைக் கொண்டு அந்நோயை எளிதாக குணப்படுத்த முடியுமா, அல்லது கடினமா, அல்லது குணப்படுத்தவே முடியாதா என முன் கூட்டியே கணிக்க முடியும்.
இங்கு நான் கூற வருகிற முக்கியமான செய்தி என்னவென்றால், வெண்புள்ளி நோயில் மேற்கூறிய குறிகுணங்கள் இல்லாமல் எளிதில் குணமாகக்கூடிய வகையைச் சேர்ந்த வெண்புள்ளி நோயாக இருந்தாலும், நோய் ஆரம்பித்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியிருந்தாலும் குணமாவது கடினம்.
ஒரு உதாரணத்திற்காகத்தான் வெண்புள்ளி நோயை இங்கே குறிப்பிட்டேன். இதேபோல ஒவ்வொரு நோயிலும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மேலும் சிகிச்சை எடுக்காமல் அல்லது சரியான சிகிச்சை எடுக்காமல் வைத்திருந்தால் குணமாகாத நிலைக்கு சென்றுவிடும். அதன் பிறகு மருந்துகளோடு போராடி பயனில்லை.
இந்த இடத்தில் இன்னொன்றையும் புரிந்துகொள்ள வேண்டும். எல்லா நோய்களுக்குமே தீரும் நிலை, தீரா நிலை என்ற வேறுபாடு உள்ளது.
தீரும் நிலை, தீரா நிலை என்றால் என்ன?
ஒவ்வொரு நோய்க்கும் பல குறிகுணங்கள் இருக்கும். அந்த குறிகுணங்களில் ஒரு சில குறிகுணங்களைக் கொண்டு இந்த நோய் குணமாகும், அல்லது இந்த நோய் முறையாக தொடர்ந்து இத்தனை காலம் மருந்து சாப்பிட்டு வந்தால் குணமாகும், அல்லது இந்த நோய் குணமாகாது என முதலிலேயே முடிவுக்கு வரமுடியும்.
ஆக எல்லா நோய்களையுமே ஆரம்ப நிலையிலேயே சித்த மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம்.
அதே போல எல்லா நோய்களுமே அதாவது எளிதில் குணமாகும் என்ற நிலையில் உள்ள நோய்கள்கூட, மிக முற்றிய நிலையில் குணமாவது கடினம்.
அப்படியிருக்க நோய் வந்தவுடன் ஒரு மருத்துவமுறையை பின்பற்றிவிட்டு, பிறகு நோய் முற்றிய நிலையில் இதற்கு சித்த மருத்துவம் செய்து பார்ப்போமே என்று வருவது புத்திசாலித்தனம் அல்ல.
மருத்துவ ஆலோசனைக்கு:
Dr.Jerome -FI

Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.
அலைபேசி எண்: 9444317293
இணையதள முகவரி:www.doctorjerome.com
மின்னஞ்சல் முகவரி :drjeromexavier@gmail.com
முகநூல் முகவரி: https://www.facebook.com/jerome.xavier.5209?fref=ts

No comments:

Post a Comment