Wednesday 27 January 2016

உங்கள் உடலை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்



2011-09-07-1417-46(52).jpg

உடலில் உள்ள உறுப்புகளின் அடிப்படையில் எல்லா உடல்களும் ஒரே மாதிரியானவைதான். ஆனால் செயல் அடிப்படையில் மூன்று விதமான உடல் வாகு உள்ளது.
  1. வாத உடல்
  2. பித்த உடல்
  3. கப உடல்
இதில் உங்கள் உடல் எந்த வகையானது என உங்களுக்குத் தெரியுமா?
எவ்வாறு மூன்று விதமான உடல் உருவாகிறது?
moondru vidha udal3


ஆணின் விந்தணுவும், பெண்ணின் கருமுட்டையும் இணைந்தே கரு உருவாகிறது. அவ்வாறு உருவாகும் நேரத்தில் வாதம், பித்தம், கபம் எனும் மூன்று இயக்கங்களில் எந்த இயக்கம் அதிகமாக செயல்படுகிறதோ அந்த அடிப்படையிலேயே அந்த கரு, உடலாக உருவாகிறது.
வாதம் மிகுந்த நிலையில் உருவாகும் கருவிலிருந்து வரும் உடல் வாத உடலாகவும்,பித்தம் மிகுந்த நிலையில் உருவாகும் கருவிலிருந்து வளரும் உடல் பித்த உடலாகவும்,கபம் மிகுந்த நிலையில் உருவாகும் கருவிலிருந்து வரும் உடல் கப உடலாகவும் அமைகிறது.
இவைமட்டுமல்லாது கலப்பு உடல் அமைப்பும் உள்ளது. இவற்றையெல்லாம் மிகச் சரியாகக் கூறவேண்டுமானால் அடிப்படையாக நாடியை பரிசோதிக்க வேண்டும். மேலும் பல பரிசோதனைகளின் மூலமே ஒருவர் என்ன தேக நிலையை உடையவர் என கூற முடியும்.
ஆனாலும் சில பொதுவான குறிகுணங்களைக் கொண்டு தேக நிலையை வகைப்படுத்தலாம்.


moondru vidha udal1

வாத உடலினர் எப்படி இருப்பர்:

-மெலிந்து உயர்ந்த உடல்.
-பருத்த அடித்தொடைகள்.
-நடக்கும்போது மூட்டுகளில் ‘டக்’ என சத்தம் வருதல்.
-தடித்த இமைகள்.
-கறுத்து, முனை பிளந்த தலைமுடி.
-கருமை வெண்மை கலந்த உடல் நிறம்.
-இனிப்பு, புளிப்பு, உப்பு, சூடுள்ள பொருள்களில் விருப்பம்.
-குளிர்ச்சியான பொருட்கள் பிடிக்காது.
-அதிகம் சாப்பிடுவர் ஆனாலும் உடல் வலிமை குறைவாகவே இருக்கும்.
-உணர்ச்சி, அறிவு ஆகியவை நிலையில்லாதது.
-இசை, விளையாட்டு, அவமதிப்புச்சிரிப்பு போன்றவற்றில் விருப்பம் இருக்கும்.
-ஈகை குணம் காணப்படாது.
-புலமைத் திறமை இருக்கும்.


பித்த உடலினர் எப்படி இருப்பர்:

-உடலில் எப்போதும் வெப்பம், வியர்வை காணப்படும்.
-உள்ளங்கை,உள்ளங்கால் சிவந்தும் மஞ்சள் நிறம் பெற்றும் இருக்கும்.
-இமைகள் மெல்லியதாய் இருக்கும்.
-வெயில்,கோபம் இவற்றால் கண்கள் சீக்கிரம் சிவந்துவிடும்.
-மது அருந்தினால் கண்கள் விரைவில் சிவந்துவிடும்.
-தலைமுடி சற்று மஞ்சள் நிறத்தில்(செம்பட்டை) காணப்படும்.
-உடலில் உரோமங்கள் குறைவாகக் காணப்படும்.
-சீக்கிரம் நரைக்கும்.
-இனிப்பு, துவர்ப்பு, கசப்பு, குளிர்ச்சியான பொருட்கள் பிடிக்கும்.
-பசி, தாகம், சூடு ஆகியவற்றை தாங்கிக் கொள்ள முடியாது.
-தைரியம், எதிலும் வெறுப்பு, தர்மகுணம், அறிவாற்றல் ஆகியவை இருக்கும்.

கப உடலினர் எப்படி இருப்பர்:

-பருத்த உடல்
-பரந்த நெற்றி
-கசப்பு, காரம், துவர்ப்பு ஆகியவைகளில் விருப்பம்
-சூடான உணவை விரும்புவர்.
-பசி, தாகம் பொறுத்துக்கொள்வர்.
-உடல் வலிமை இருக்கும்.
-குறைந்த அளவே சாப்பிடுவர்.
-அமைதியான குணம்

இவை தவிர,
வாத பித்த தேகம்
வாத கப தேகம்
பித்த வாத தேகம்
பித்த கப தேகம்
கப பித்த தேகம்
கப வாத தேகம்
என கலப்பு உடலினரும் உள்ளனர்.
எனவே மேலே கூறிய ஒன்றிரண்டு குறிகுணங்களை மட்டும் வைத்து ஒருவர் இந்த வகையான உடல் அமைப்புடையவர்கள் என சட்டென முடிவுக்கு வந்துவிடக்கூடாது.
ஆனாலும் அடிப்படையில் மூன்று விதமான உடல் இயங்கியல் உள்ளது என்பதை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காகத்தான் இந்த கட்டுரை.

மருத்துவ ஆலோசனைக்கு:
Dr.Jerome -FI
Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.
அலைபேசி எண்: 9444317293
இணையதள முகவரி:www.doctorjerome.com
மின்னஞ்சல் முகவரி :drjeromexavier@gmail.com
முகநூல் முகவரி: https://www.facebook.com/jerome.xavier.5209?fref=ts

No comments:

Post a Comment