Thursday 26 November 2015

சிறுநீரகக் கற்களை மருந்தினால் கரைக்க முடியும்- kidney stones



siruneeraga karkal fi

சிறுநீரகத்தில் உருவாகும் கற்களை அறுவை சிகிச்சை செய்யாமல் சித்தா மருந்துகள் சாப்பிடுவதாலேயே கரைக்க முடியும். எனவே அறுவை சிகிச்சையும் தேவையில்லை அதிக பணமும் தேவையில்லை.
சிறுநீரகத்தில் உருவாகின்ற கற்களைப் பொறுத்தவரையில்(kidney stones) மருந்துகள் கண்டுபிடிக்கவே முடியவில்லை என்கிற முடிவுக்கு அலோபதி மருத்துவம் வந்துவிட்டது.
ஆனால் சிறுநீரகக் கற்களை சித்த மருத்துவத்தில் மிகச் சாதாரணமாக மருந்துகளால் கரைத்து விட முடியும் என்கிற நற்செய்திதான் இந்த கட்டுரை.
“Attempts to develop drugs that dissolve stones have so far been unsuccessful ” அதாவது, சிறுநீரகங்களில் உருவாகும் கற்களை கரைப்பதற்கான மருந்துகளை கண்டறியும் முயற்சிகள் வெற்றியடையவில்லை என்கிறது அலோபதி மருத்துவம். எனவே சிறுநீரகக் கற்களுக்கு அறுவை சிகிச்சை அல்லது கதிர்வீச்சு சிகிச்சையை (ESWL) பரிந்துரைக்கின்றனர் .
அலோபதி மருத்துவத்தின் மருந்தியல் வளர்ச்சி என்பது அபரிமிதமானது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக வளர்ந்து கொண்டிருப்பது. அதன் வளர்ச்சியை கழுத்து வலிக்க அண்ணார்ந்து பார்க்க வேண்டியதிருக்கிறது. அப்படியிருக்க அதனால் சிறுநீரகக் கற்களைக் கரைப்பதற்கு மருந்து தயாரிக்க முடியவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.
சிறுநீரகக் கற்கள் எனும் பிரச்சினையை ‘கல்லடைப்பு நோய்’ என சித்த மருத்துவம் நோய் கணிப்பு செய்கிறது.

சிறுநீரகக் கற்கள் என்றால் என்ன ?

siruneeraga karkal2

சிறுநீரகங்கள் மற்றும் அவற்றிலிருந்து சிறுநீர்ப்பைக்கு சிறுநீரை கொண்டு செல்லும் சிறுநீர் குழாய்கள், சிறுநீர்ப்பை, சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீர் வெளியேறும் வரை உள்ள எந்த இடத்திலும் உருவாகும் கற்களை சிறுநீரகக் கற்கள் என்கிறோம். சிறிய மணல் அளவு கற்களில் இருந்து பல மில்லி மீட்டர் அளவு வரை உருவாகலாம்.

அவைகளுடைய பகுதிப்பொருள்களால் அவை பல வகைப்படுகின்றன.

•    80% சிறுநீரகக் கற்கள் கால்சியம் தாதுவினால் உருவாகின்றன. அவை கால்சியம் ஆக்சலேட்களாலும்(Calcium oxalate), கால்சியம் பாஸ்பேட்களாலும்(Calcium Phosphate) உருவாகின்றன.
•    15% கற்கள் மக்னீசியம் அம்மோனியம் பாஸ்பேட்களால்(Magnesium Phosphate, ammonium Phosphate) உண்டாகின்றன.
•    இவை தவிர சிஸ்டைன்(Cystine) மற்றும் யூரிக் அமிலத்தாலும்(Uric acid) கற்கள் உண்டாகின்றன.

சிறுநீரகக் கற்கள் ஏன் உண்டாகின்றன ?

இரண்டு காரணங்கள்.
1.    நாம் உண்ணும் உணவும் நீரும் காரணம்.
2.    பரம்பரையாக வரும் உயில் எழுதாத சொத்து.

யாருக்கெல்லாம் சிறுநீரகக் கற்கள் வரலாம்?

போதுமான அளவு நீர் குடிக்காமல் இருப்பவர்கள்.
புரதப்பொருள் அதிகம் உள்ள உணவுப்பொருட்கள் அதிகம் சாப்பிடுவார்கள்.
“என்ன சமைக்கிற… உப்பே பத்தல….. இன்னும் கொஞ்சம் உப்பு போடு…” என்று பேசும் நாக்கு உள்ளவர்கள்.
திராட்சை பழச்சாறு, ஆப்பிள் பழச்சாறு அதிகம் குடிப்பவர்கள்.
கால்சியம் மாத்திரைகளை அதிக வருடங்கள் எடுத்துக் கொள்பவர்கள்.
siruneeraga karkal6
சில நோய் நிலைகளில் உள்ளவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் உருவாகலாம். உதாரணமாக இரத்தத்தில் கால்சியம் அளவை அதிகரிக்கக்கூடிய பாரா தைராய்டு போன்ற பிரச்சினைகள் உள்ளவர்கள்.
பரம்பரை சொத்தாக கற்களைப் பெறுபவர்கள்.
பெரும்பாலும் ஆண்களுக்கு இந்நோய் உண்டாகிறது.

கல்லடைப்பு நோயின் குறிகுணங்கள்:

siruneeraga karkal5

3 மில்லி மீட்டர் அளவு வரையிலான கற்கள் தானகவே சிறுநீர் கழிக்கும் போது வெளியே வந்துவிடும்.
அதற்குமேல் பெரியதான கற்கள் சிறுநீரகத்திலோ சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்கு செல்லும் குழாயிலோ, சிறுநீர்பையிலிருந்து சிறுநீர் வெளியேறும் துவாரம் வரையிலோ எங்கேனும் அடைத்துக்கொண்டு அல்லது சிக்கிக்கொண்டு வலியை ஏற்படுத்தும்.
தொப்புள், உள்தொடை, ஆண்குறி, பெண்குறி, அடி முதுகு, போன்ற பகுதிகளில் வலி ஏற்படும்.
வலியைத் தொடர்ந்து வாந்தி வரும் உணர்வு (ஓக்காளம்).
வாந்தி எடுத்தல்.
சுரம்.
சிறுநீரில் இரத்தம் வருதல்.
சிறுநீர் கழிக்கும்போது வலி எடுத்தல்.
போன்ற குறிகுணங்கள் காணப்படும்.
நோயை எவ்வாறு கண்டறிவது ?:
மேற்கூறியவாறு கற்கள் உண்டாவதற்கான வாய்ப்பு உள்ளவர்கள் வருடத்திற்கு ஒருமுறை சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையை நுண்கதிர் சோதனை (Scan) செய்து பார்த்துக்கொள்வது நல்லது. (பொதுவாக 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் வருடத்திற்கு ஒருமுறை முழு வயிற்றுப்பகுதியையும் நுண்கதிர் சோதனை  (Ultra sound scan – KUB)செய்து பார்த்துக்கொள்வது நல்லது.)

சித்த மருத்துவம் வகைப்படுத்தும் கற்களின் வகைகள்:
வாத கல்லடைப்பு
பித்தகல்லடைப்பு
கப கல்லடைப்பு
வெண்ணீர் கல்லடைப்பு

என கல்லடைப்பு நோய் நான்கு வகைப்படுகிறது.
siruneeraga karkal3

வாத கல்லடைப்பு நோயில் கற்கள் முள் போன்று கருமையாக இருக்கும். இந்நோயில் சிறுநீர்ப்பையில் வலி இருக்கும்.
siruneeraga karkal1

பித்த கல்லடைப்பு நோயில் கற்கள் செம்மை கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். இந்நோயில் சிறுநீர்ப்பையில் கொதிப்பும் எரிச்சலும் இருக்கும்.
siruneeraga karkal4

கப கல்லடைப்பு நோயில் கற்கள் வெமையாக வழவழப்பான இருக்கும். சிறுநீர்ப்பை குளிர்ச்சியாக உணரப்படும். அந்த இடத்தில் ஊசியால் குத்துவது போல வலி இருக்கும் .
வெண்ணீர் கல்லடைப்பு ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனை. விந்துக்கள் தொடர்பாக வரும் பிரச்சனை இது.
நல்ல உடல் நிலையில் உள்ள இளம் வயது ஆண்களுக்கு ஏன் கற்கள் உண்டாகின்றன என தெரியவில்லை என அலோபதி மருத்துவம் சொல்வதற்கான பதில் இங்கே இருக்கிறது.

மருத்துவம் :

சித்த மருத்துவத்தில் சில சுண்ணங்கள், பற்பங்கள், மற்றும் சில புகைநீர்கள் போன்ற கற்களை கரைக்கக்கூடிய வலிமையான மருந்துகள் உள்ளன. இவற்றுடன் சில மூலிகைகளின் குடிநீரையும் எடுத்துக்கொள்வதன் மூலம் கற்களை கரைக்க முடியும்.
அறுவை சிகிச்சை இல்லாமல் குணமாக்கக்கூடிய நோய்களில் சிறுநீரகக் கற்களும் ஒன்று.

மருத்துவ ஆலோசனைக்கு:
Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.
அலைபேசி எண்: 9444317293

2 comments:

  1. Hey thегe and Thank you so much for sharing this information. It has very useful. Please keep sharing.If you want more about the best treatment Kindly click the link Kidney stone treatment

    ReplyDelete
  2. Thanks for this great blog! This information is so valuable. Keep posting. If you want to know about how long can kidney stones be left untreated, visit our blog.

    ReplyDelete