Monday 5 October 2015

இந்த பரிசோதனை செய்யாமல் சித்த மருத்துவம் செய்யமுடியாது



Dr.Jerome -FITele medicine என்ற ஒன்று இப்போது காலத்தின் தேவையாகி வருகிறது. அதாவது காணொளி மருத்துவம். மருத்துவர் ஒரு இடத்தில் இருப்பார், நோயாளி வேறோர் இடத்தில் இருப்பார். காணொளி மூலமாக நோயாளியைப் பார்த்து அவர் கூறும் குறிகுணங்களைக் கேட்டு, அவரது ஆய்வக முடிவுகளைக் கேட்டு மருத்துவம் செய்வது.
இப்படி சித்த மருத்துவத்தை செய்யமுடியுமா? என யோசித்துப் பார்க்கிறேன்.
நோயாளி சொல்லும் குறிகுணங்களைக் கொண்டு நோயை கணிக்க முடியும் என்றாலும், மிகச் சரியான சிகிச்சை முறையை மற்றும் மருந்துகளை முடிவு செய்வதற்கு நோயாளியின் தேக நிலையை அறிவது அவசியம். அதாவது நோயாளி வாத உடலினரா அல்லது பித்த உடலினரா அல்லது கப உடலினரா அல்லது கலப்பு உடலினரா என்பதை தெரிந்த பிறகே பரிகார முறைகளையும், மருந்துகளையும் தீர்மானிக்க வேண்டும். இதனை அறிவதற்கு செய்ய வேண்டிய அடிப்படை பரிசோதனைதான் “நாடி”.
இந்த பரிசோதனையை செய்யாமல் சித்த மருத்துவம் செய்ய முடியாது, செய்யக்கூடாது.
sidda maruththuvam 1“நாடி” பரிசோதனை அல்லது நாடியைப் பிடித்துப் பார்த்து நோயை கணிப்பது என்பதை சாதாரணமாக விளக்கிவிட முடியாது. ஆனாலும் அதைப் பற்றிய அறிமுகம் அனைவருக்கும் தேவை.
“நாடி” என்பதைப் பற்றி பேசாமல், சரியான சித்த மருத்துவ அறிமுகம் என்பதில் அர்த்தமில்லை.

பரிசோதனை முறைகள் (Diagnostic Methods):

சித்த மருத்துவத்தில் நோயினைக் கண்டறிவதற்கு அடிப்படையான பரிசோதனை முறைகள் எட்டு உள்ளன.
அவை,
  1. நாடி
  2. ஸ்பரிசம்
  3. நாக்கு
  4. நிறம்
  5. மொழி – நோயாளியின் பேச்சு
  6. விழி
  7. மலம்
  8. சிறுநீர்
இவற்றுள் முதன்மையானதும், முக்கியமானதும், அடிப்படையானதுமானது நாடி.

நாடி என்றால் என்ன?
siddha5இருதயம் இரத்தத்தை இரத்தக் குழாய்களின் வழியாக உடலின் எல்லா பாகங்களுக்கும் உந்தித் தள்ளுகிறது. இப்படி ஓடும் இரத்தத்தினால் இரத்தக் குழாய்களில் உணரப்படும் துடிப்பே நாடி.
பொதுவாக எந்த மருத்துவ முறையைச் சேர்ந்த மருத்துவரிடம் சென்றாலும் கையைப் பிடித்து நாடி பார்ப்பார்.
சாதாரணமாக அலோபதி மருத்துவர்கள் பார்க்கும் நாடி என்பது வெறும் எண்ணிக்கைதான். அதாவது ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 72 முறை துடிக்கவேண்டும். இதற்கு pulse rate என்று பெயர். இந்த எண்ணிக்கை கூடுவதை, குறைவதைக் கொண்டு உடலின் செயல்பாட்டை பொதுவாக அறிந்து கொள்ளலாம்.
நாடி விகிதம் – pulse rate
உடல் வெப்பநிலை- Body Temperature
இரத்த அழுத்தம்- Blood Pressure
சுவாச விகிதம் (மூச்சுவிடும் எண்ணிக்கை) – respiratory rate
ஆகிய இந்த நான்கையும் மிக முக்கிய அறிகுறிகள் (Vital Signs) என அவர்கள் கருதுகின்றனர். இது மிகவும் சரியே.
ஆனால் இந்த நாடி கணிப்பு வேறு, சித்த மருத்துவமுறை நாடி கணிப்பு வேறு.
சித்த மருத்துவமுறையில் நாடிகளின் எண்ணிக்கை கவனிக்கப்படுவதில்லை. நோயாளியின் தேகநிலை கவனிக்கப்படுகிறது, அதாவது அவர்siddha2வாத தேகியா, பித்த தேகியா, கப தேகியா அல்லது கலப்பு தேகியா என்பதை கவனிக்கிறோம்.
நமது உடலில் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று இயக்கங்கள் உள்ளன. இந்த இயக்கங்களின் செயல்பாட்டை பரிசோதிப்பதுதான் நாடி கணிப்பு.
ஏனென்றால் இந்த மூன்று இயக்கங்களில் ஏற்படும் பாதிப்புகளால்தான் நோய்கள் வருகின்றன.
“மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று”
என்ற குறளில் இதை காணலாம்.
வளி என்றால் வாயு அல்லது வாதம். வாதத்தை முதலாவதாகக் கொண்ட,
வளி – வாதம்
அழல் – பித்தம்
ஐயம் – கபம்
என்ற மூன்றும் அதிகரிப்பதாலும் குறைவதாலும் நோய் உண்டாகிறது. இதுதான் சித்த மருத்துவத்தின் அடிப்படை.

நாடி எப்படி பரிசோதிக்கப்படுகிறது?

வெறும் எண்ணிக்கையைப் பார்ப்பதற்கு ஒரு விரலை வைத்துக்கூட எண்ணிவிடலாம். ஆனால் வாத, பித்த, கபத்தை கணிப்பதற்கு மூன்று விரல்களை வைத்துப் பார்க்கிறோம்.
கட்டைவிரல் பக்கமாக மணிக்கட்டிற்கு 1 அங்குலம் மேலே ஆரை எலும்பின் (Radius Bone) மேல் செல்லும் இரத்தக்குழாயின் (radial Artery) மேல் விரல்களை வைத்து நாடி பார்க்கிறோம்.
ஆள்காட்டி விரலில் உணரப்படுவது – வாதம்
நடுவிரலில் உணரப்படுவது –பித்தம்
மோதிர விரலில் உணரப்படுவது – கபம்
இவை முறையே 1: ½ : ¼ என்ற விகிதத்தில் துடித்தால் நல்ல நிலையில் உடல் உள்ளது (Normal) எனலாம்.
இங்கு விரல்கள்தான் கணிக்கும் கருவிகள்.
(இவற்றை மின்னணு முறையில் பதிவு செய்ய முடியுமா என்ற பரிசோதனை ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனை விரைவுபடுத்த வேண்டியதும் அதற்கு நிதி ஒதுக்க வேண்டியதும் அரசின் கடமை. தமிழ் தமிழ் என பேசுபவர்கள் இதனை கவனிக்க)
siddha7
நாடியில் ஆண் பெண் வேறுபாடு:

ஆண்களுக்கு வலது கையிலும், பெண்களுக்கு இடது கையிலும் நாடி பரிசோதனை செய்கிறோம்.

நாடி பரிசோதனையின் சிறப்புகள்:
-          நோயாளியால்தனதுநிலையைகூறமுடியாதநிலையிலும்அவர்தேகநிலையைஅறியலாம்.
-          நோயின்அடிப்படைகாரணத்தைக்கண்டறியலாம்.
(“நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்”
என்ற குறளை இங்கு குறிப்பிடுவதை தவிர்க்க முடியவில்லை.)
  • நோய்குணமாகுமாகுணமாகாதாஎன்பதைஆரம்பத்திலேயேகணித்துவிடலாம்.
அதாவது நாடிகள் தெளிவாக வாதநாடி, பித்தநாடி, கபநாடி என உணரப்படும். அதேபோல கலப்பு நாடிகளும் உணரப்படும்.
அதாவது,
வாத பித்தநாடி
வாத கபநாடி
பித்த வாதநாடி
பித்த கபநாடி
கப வாதநாடி
கப பித்தநாடி

என்று இதில் கப வாதமும், வாத கபமும் இருக்கும் நிலையில் நோய் குணமாவது கடினம்.

இப்படிப்பட்டவர்களுக்கு அதிகநாள் சிகிச்சை அளிக்க வேண்டிவரும்.

எத்தனை பேருக்கு நாடி பார்த்து பழகி மருத்துவராகிறோம்.

B.S.M.S படிப்பில்மூன்றாம்ஆண்டுமுதல்நோயாளிகளைசந்திப்போம்.
அடுத்த மூன்று ஆண்டுகள் மற்றும் ஒரு வருட பயிற்சி மருத்துவம், ஆக 4 ஆண்டுகள் நோயாளிகளை சந்திக்கிறோம்.
ஒரு நாளைக்கு குறைந்தது 100 நோயாளிகளுக்கு நாடி பரிசோதித்தால், எப்படியும் ஒரு இலட்சம் பேருக்காவது நாடி பார்த்துத்தான் ஒருவர் சித்த மருத்துவராக உருவாகிறார். M.D மூன்று வருடங்களையும் சேர்த்தால் 2 இலட்சம் பேரின் நாடி நிலைகளை அறிந்து பழகிதான் சித்த மருத்துவராகிறார். எனவே நாடி பரிசோதனை உயிர்ப்புள்ளதாகவே இருக்கிறது. இன்னும் சிறப்பாக வளரும்.
நாடியை சரியாக கணித்துவிட்டாலே போதும் பாதி சிகிச்சை முடிந்தது. அதன் பிறகு மருந்தை தீர்மானிப்பது சுலபம் மட்டுமல்ல. அதன் அடிப்படையில் கொடுக்கப்படும் மருந்து மிகச் சரியாக நோயை குணமாக்கும்.

மருத்துவ ஆலோசனைக்கு:

Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D
சித்தமருத்துவ மையம்,
டாக்டர்ஸ் பிளாசா,
சரவணா ஸ்டோர் எதிரில்,
வேளச்சேரி பேருந்து நிலையம் அருகில்,
வேளச்சேரி, சென்னை.
அலைபேசி எண்: 9444317293

No comments:

Post a Comment